Wednesday, June 13, 2018

காரிமுதல் காரி வரை




அன்பின் ஜெ,

வணக்கம்!.

"காஞ்சிர மரம்". கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி நினைவிலெழுந்து அமிழும் சொல்.  முதலாம் காரியின் பார்வையில் ஆரம்பித்து செங்கர் காரி வரையிலான அதன் உருவகமும், வழிப்பாதை தெய்வமாக பதிட்டை செய்யப்பட்டது முதல் வழிப்போக்கர்களின் வழித்துணையாக ஆகி நிற்ப்பது வரையிலான சித்திரங்கள் ஒவ்வொன்றாய் மனதில் எழுந்தபடி இருந்தன.

எங்கள் வீட்டில் " சாமி மரம்" என்றழைக்கப்படும் வேப்பமரம் உண்டு.  பெரியகுடும்பமாய் தாத்தா வீட்டில் அனைவரும் இருந்த போது கொல்லைப்புறத்தில் இருந்த சாமி மரம் அனைவருக்குமானதாக இருந்தது.
அப்பா மற்றும் சித்தப்பா ஆகியோர் தனிதனியாக வீடு கட்டியவுடன் மூன்று தனி மரங்களாக ஆனது.

எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் அமைந்துள்ள சாமிமரத்திற்க்கு எனக்கு நினைவுதெரிந்த பொழுதிலிருந்து
 தற்போது வரை குறிப்பிட்ட இடைவெளியில் வழிபாடு செய்வதுண்டு.

 வரைமுறைகளுடன் கூடிய அந்த வழிபாடு
அந்திசாயும் நேரத்தில் தொடங்கி இருள் அருகணைந்த நிமிடங்களில் முடிவடையும்.

காரியின் காஞ்சிரமர வழிபாடு எங்களின் சாமிமரத்திற்க்கான பூசெய்கைகளை நினைவுபடுத்தியபடி இருந்தது.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.