அன்பின் ஜெ,
நீலம்
ஆரம்பித்து சில தினங்களுக்குபின்னிருந்து தினம் தினம் உங்களுக்கு கடிதம் எழுதி
எழுதி அழித்துக்கொண்டு உள்ளேன், ஏன்னெனில் ஒருபோதும் என் உள்ளத்தில் இருப்பதை
எழுத்தில் கொண்டுவர முடியவில்லை. இனியும் முடியாது என்பதனால் முடிந்தது இங்கு.
அன்பின் ஆசான் நான் எளியவன் எனக்கு நீலம் போன்ற பெரும் கனத்தை சுமக்கமுடியவில்லை.
நான் கடந்த 5 ஆண்டுகளாக தினந்தோறும் உங்கள் எழுத்தை படித்துவருபவன், கதையோ,
கட்டுரையோ, விவாதமோ எதைஎன்றாலும் உங்கள் முகபாவனையோடு ஒப்பிட்டு படிப்பவன்
நீலம் ஒருபோதும் உங்கள்முக நினைவை
கொண்டுவரவில்லை, பெரும் திகைப்பு , உணர்ச்சிவசப்படல், அழுகை, பரவசம் நிலையறியா
நிலை, கண்ணனின் விளையாட்டை கண்டு ரசிக்காமல் திகைப்பதும் பரவசம்
கொள்வதும் ஏன்? ராதையின் பிரேமை மனத்தை வலிக்க செய்வது ஏனோ? ராதையின் மணம்
வெக்கம்விட்டு அழசேய்தது எங்கனம்? பெரும் திகைப்பை அளிக்கும் வர்ணனைகளும்,
உவமைகளும் , சொல்லாடல்களும். ஒவ்வொரு முறையும் வேறுவேறு தரிசனம், சில சமயங்களில்
இல்லை இது என் ஆசான் இல்லை சத்தியமாக அவர் இல்லை என கததவேண்டும் போல மனோநிலை, என்ன
உணர்ச்சி என்றே புரிய நிலை. இதன் தாக்கத்தை என்னவென்று சொல்வேன் !! சுனில்
சொன்னதைப்போல் இதுவேறு ஜெ , பித்து நிலை என்செய்வேன், எப்படி புரிந்துக்கொள்வேன் , எப்படி
மீள்வேன்
விஜய் சூரியன்
அன்புள்ள விஜய்
இன்று கிருஷ்ண ஜெயந்தி
அது ஒரு விஷயமாகவே தெரியவில்லை.
எப்போதுமே இந்நாள் என்பதுபோல
ஜெ