Tuesday, October 7, 2014

வியாசமனம் பற்றி




அன்புள்ள ஜெ சார்

மரபின்மைந்தன் அவர்கள் எழுதிய முதற்கனல் நாவல் விமர்சனம் வாசித்தேன். மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். நான் முதற்கனல் நாவலை கூர்ந்து வாசித்திருக்கிறேன். அவர் சொல்லும் பெரும்பாலும் எல்லா நுட்பங்களையும் கவனித்திருக்கிறேன். ஆனால் அவர் கம்பராமாயணம் உட்பட பல பழைய இலக்கியங்களைக் கூர்ந்து வாசித்திருக்கிறார். அவறுடன் சம்பந்தப்படுத்தி அவர் முதற்கனலின் காவியத்தன்மையைச் சுட்டிக்காட்டும்போது ஆச்சரியமாகவும் நிறைவாகவும் இருக்கிறது

இததகைய கட்டுரைகள் வழியாகவே நாம் முதற்கனல் போன்ற நாவலை முழுமையாகவும் சிறப்பாகவும் வாசிக்கமுடியும். அவருக்கு என் நன்றி

சித்ரா



அன்புள்ள ஜெயமோகன்

மரபின்மைந்தன் அவர்கள் எழுதிய முதற்கனல் நாவல் விமர்சனம் சிறப்பாக இருந்தது. அவரது கட்டுரைகள் வழியாக முதற்கனலை சிறப்பாக வாசிப்பதற்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இதேமாதிரியான வழிகாட்டும் கட்டுரைகள் தேவை

பசவராஜ்


அன்புள்ள ஜெ சார்

முதற்கனல் நாவலைப்பற்றி மரபின்மைந்தன் அவர்கள் எழுதிய கட்டுரைத்தொடர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர் பல இடங்களைச் சுட்டிக்காட்டியபிறகே என்னால் நாவலை முழுமையாக உள்வாங்கமுடிந்தது. அனேகமாக் எல்லா கதாபாத்திரங்களின் சிறப்பு அம்சங்களையும் அருமையகாச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாவலில் எதையுமே தவறவிடாமல் வாசிக்க உதவக்கூடிய கட்டுரை

சுகுமார்


அன்புள்ள ஜெமோசார்

முதற்கனல் பற்றிய மரபின் மைந்தனின் வியாசமனம் வாசித்தேன். சிறப்பான கட்டுரை. ஆனால் சத்யவதியைப்பற்றிய அவரது  கணிப்பைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன். அவர் ஆரம்பத்திலேயே சொல்வதுபோல எல்லாரும் ஒரு பெரிய சதுரங்கத்தின் வெறும் களங்களாகவேதான் இருக்கிறார்கள். சத்யவதியும். மழைப்பாடலில் சத்யவதியின் கதாபாத்திரம் அடையும் முழுமையை முதற்கனலை மட்டும் வாசிக்கும்போது ஆச்சரியத்துடன் தான் பார்க்கமுடிகிறது

சிவராம்