Thursday, October 16, 2014

பொற்சிலம்பு




அன்புள்ள ஜெ,

மழைபபடல் வழியாக ஆங்காங்கே வாசித்துக்கொண்டிருந்தேன். தொட்டுத்தொட்டு வாசிப்பது ஒரு பெரிய இன்பம். ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காத எவ்வளவோ விஷயங்கள் அப்ப்போது வந்தடையும்

மழைப்பாடல் முழுக்க அபரணங்களும் ஆடைகளும் உருவாக்கும் ஓசை எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிரது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. மனிதர்கள் பேச்சை அடக்கும்போது இந்த ஓசை பேச ஆரம்பிக்கிறது  கசப்பையும் விருப்பத்தையும் இதுவே பூடகமாகச் சொல்லிவிடுகிறது

குந்திக்கும் தேவவதிக்கும் இடையே உள்ள மௌனமான போரில்தான் ஆபரணங்களின் ஓசையை நான் கவனித்தேன். அதன்பிறகு பாண்டு முடிசூடும் இடத்தில் காந்தாரிகளின் வளையலோசை மிக அற்புதமாக பேசி பெரிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது

அதேபோல விதுரன் மீது குந்திக்கு இருக்கும் அன்பை ஆபரணங்களின் ஓசை மட்டும்தான் சொல்கிறது. அவள் சொல்வதில்லை. வாயால் சொல்வதும் இல்லை. கண்ணாலும் சொல்வதில்லை

இந்த ஒரு விஷயத்தைப்பிடித்துக்கொண்டே மழைப்பாடலை வாசிக்கலாமென்று தோன்றியது

சிவம்

அன்புள்ள சிவம்

சிலம்புதல் என்றாலே சொல்லுதல்தான்

சிலம்பு என அந்த நகைக்குப்பெயர்

ஜெ

கேசவமணி -மழைப்பாடல் பற்றிய தொடர்