ஜெ
நீலமணிக்கண்ணனும் ராதையும் மலர்சொரிந்துவிட்டனர். சொல்மலர். ஆன்மாவை
உலுக்கும் வினாக்கள், ஆழமான காதல், பித்துநிலை. அவர்கள் நீங்கள் விரித்த மலர்கம்பளத்தில் நடனமிட்டார்கள்
உண்மையில் நான்
ராதையின் பரிதவிப்பும் பரவசமும் முடிவடைந்தபோது சற்று ஆறுதல்தான் அடைந்தேன். அது
சாதாரண மனித மனதுடனும் வாழ்க்கையுடனும் மேலும் நெருக்கமானதாக இருந்ததுதான் காரணமாக
இருக்கலாம். நீலம் தனிப்பட்டமுறையில் துயரத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கும்
நரம்பைத் தீண்டிவிட்டது. கண்ணன் நீலக்கண்மணியாக மாறி நீலக்கடம்பின் கீழே நின்று
புல்லாங்குழல் இசைத்தபோதுதான் நிம்மதியே திரும்பிவந்தது. மாயக்கண்ணன் ராதையை
உயிர்கொடுத்து பக்தர்களின் நெஞ்சில் அழியாது வாழச்செய்துவிட்டார்
அற்புதமான கதை.
உங்கள் இன்னொரு சிறந்த படைப்பு
அன்புடன்
சோபனா
அய்யங்கார்
அன்புள்ள ஜெ
நீலம் வாசித்து மனம் நெகிழ்ந்தேன். எத்தனை உணர்ச்சிகள். வாயாலோ மொழியாலோ சொல்லவேமுடியாததுபோன்ற உணர்ச்சிகள். அவற்றைச் சொல்லி முடித்ததுமே நீலம் அப்படியே காலியாக ஆனதுபோல் தோன்றியது. கடைசியில் வெறும் ராதே ராதே என்ற அழைப்பு மட்டும்தான் மிச்சம் இல்லையா?
நிறைவான அனுபவம் .நன்றி
பிருந்தா
மரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர்