Tuesday, November 11, 2014

விழா கடிதம் 2

அன்புள்ள ஜெயமோகன்,

அருமையாய் நடந்து முடிந்திருக்கிறது விழா.   விழாவுக்கு முன் எழுந்த விமர்சனங்கள் எள்ளல்களுக்கு விடையிறுப்பது போல். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  விழாவுக்கு முன் செய்யப்பட்ட அந்த irreverent promotion தேவைதான். வாசிப்பு என்பதையே மூர்க்கமாக மறுக்கும் நம்மவர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது - இளையராஜா, கமல் போல் பிரபலங்களை கொண்டு bait பண்ணாமல்.

நாஞ்சில் நாடன், அசோகமித்திரன் உரை அருமை. எனக்கு வயோதிகத்தில் தளர்ந்தவர்களை ஒரு மேடையில் பார்க்கும் போது - இப்படி அவர்களை அமர வைப்பது (because of their failing faculties) கொஞ்சம் வன்முறையோ என்று தோன்றியது உண்டு. அதை அசோகமித்திரன் போட்டு உடைத்து விட்டார். Hand mic ஐ வாங்க மறுத்த அந்த இடது கை புறக்கணிப்பு , ஆற்றிய உரை - பார்க்க, கேட்க கம்பீரமாக இருந்தார். இசை ஞானியும், கமலும் வெகு இயல்பாக. இன்னொரு ஆச்சர்யம் நீங்கள் அவ்வபோது விமர்சிக்கும் பாலகுமாரன் வந்திருந்தது. பார்க்க நிறைவாக இருந்தது.  எப்போதும் போல் அலைமோதிய கூட்டத்தால் இந்த முறையும் சந்திக்க முடியவில்லை. 

அருண்மொழியிடம் சொல்லுங்கள் அவருக்கு நல்ல 
களையான முகம் என்று. 

அன்புள்ள
மங்கை