அன்புள்ள ஜெ சார்
இன்று வெளிவந்திருக்கும் அர்ஜுனன் பற்றிய அத்தியாயம் ஓர் உச்சம். ஆண்பெண் உறவின் வண்ணங்களைப்பற்றி இதுவரை தமிழில் எழுதபட்ட மிகச்சிறந்த பகுதி இதுவே என்று சொல்வேன்.
காமத்தின் தயக்கம் பயம் அதில் போடும் பாவனைகள் சிக்கல்கள் ஒளித்துவைத்திருப்பவை அவற்றை எடுத்து வெளியே போடும்போது வரும் கோபம் எல்லாமே அற்புதமாக வந்துள்ளன
அத்துடன் காமம் எங்கே கொண்டு சென்று சேர்க்கும் என்று எழுதியிருக்கும் இடம் ஒரு பெரிய செவ்வியல் நூலில் மட்டுமே வருவது. பலமுறை வரிவரியாக வாசித்தேன்
காமம் என்பதே வேறு ஒன்றின் பொருட்டு வேறுவழியில்லாமல் செய்யப்படுவது என்ற எண்ணத்தை அந்த அத்தியாயம் அளித்தது
அதில் அந்த இருகதாபாத்திரங்களுடைய உரசல் அழகு. அர்ஜுனன் ஒளித்து ஒளித்து விளையாடுகிறான். மாருதர் தெடித்தேடி வருகிறார். அவர் பெயர் மாருதர் அதாவது காற்று
அவர் அந்த பரத்தையின் பரிதாபமான பாவனையைப்பற்றிச் சொல்லும் இடமும் அற்புதமானது. இவன் ஒன்றைத்தேடிச்செல்ல அவள் இவனிடம் வேறு ஒன்றைதேடிக்கொண்டிருக்கிறாள் என்ன சொல்ல
அவர் நாசியையும் வாசனையையும் பற்றிச் சொல்லும் இடம் கிளாசிக்/ அதேபோல அவருடைய உபதேசம் அற்புதம்
‘
காற்று எதையும் மறைந்த்து வைக்க விடாது, தேடித்தேடிவந்துவிடும் இல்லையா?
ஜெயராமன்