Wednesday, November 5, 2014

பாரதமும் வாழ்க்கையும்




நான் அதிகமாக தமிழ்நாட்டை சுற்றி வந்தவனோ அல்லது அதிகமாக வாசித்தவனோ கிடையாது நான் பார்த்ததை படித்ததை வைத்து ஒரு சிந்தனையை உருவாக்கி கொள்கிறேன் அதை மெல்ல பலரிடம் விவாதித்து ஒரு கருத்தை அறிகிறேன் உங்களை போன்ற அறிஞர்களின் அறிமுகம் இப்போது தான் கிடைத்துள்ளது அதனால் தான் கேட்டேன்.நீங்கள் என்னையும் மதித்து சிரத்தையுடன் பதில் எழுதுவது மகிழ்ச்சி.


மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்லும் வரை வழி எங்கும் சித்திரை முதல் ஆடி மாதம் வரை விடிய விடிய கூத்துகள் நிகழ்வதை பார்த்து இருக்கிறேன்.இங்கும் மயிலாடுதுறை மற்றும் கீழ் தஞ்சை மாவட்டங்களில் இன்றும் கூத்துகள் நிகழ்த்து கலையாக நடைபெற்று வருகிறது.மற்ற நாட்களில் அல்ல அனால் கண்டிப்பாக திருவிழா நாட்களில் கடைசி நாள் அன்று கூத்து ஒரு முக்கியமான நிகழ்வு.இது இங்கு தொடங்கி காவேரி வடகரை மாவட்டங்களில் எல்லாம் நிகழ்கிறது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


ஆனால் மகாபாரதத்தை ஒட்டிய கூத்துகள் முதல் சில நாட்டார் கலைகள் த்ரௌபதி அம்மன் கோவில்கள் வன்னியர் பெரும்பான்மையான இடங்களில் இருப்பதால் அந்த கேள்வியை கேட்டேன். வெண்முரசு தினமும் படித்து வருகிறேன் நிகழ்சிக்கு நேரில் வரமுடியாவிட்டாலும் கண்டிப்பாக வலைத்தளத்தில் பார்பேன். உங்களுக்கு வாழ்த்துகள் இப்பொழுதுதான் துவங்கியிருகிறீர்கள் என்று நினைக்கிறேன் இன்னும் அதிக உயரம் செல்வீர்கள் மலைப்பாக இருக்கிறது இன்னும் ஒரு 100 வருடங்களுக்கு உங்கள் சாதனையை சமன் செய்ய யாராவது வருவார்களா என்று தெரியவில்லை.


இன்னும் பின்தொடரும் நிழலின் குரல்,ஏழாம் உலகம் மற்றும் வெள்ளை யானை படிக்கவில்லை உங்கள் வலைதளத்தை தான் தினமும் ஒரு 5 வருடமாக படித்து வருகிறேன்.காடு கொற்றவை விஷ்ணுபுரம் அறம் இரவு இவற்றை படித்து விட்டேன் இப்பொது  வெண்முரசு. நிறைய தெரிந்துகொண்டேன் இப்போது என்னுடைய எண்ணமும் சிந்தனையும் சற்று மாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறேன்.கடவுள் மதம் ஆத்திகம் நாத்திகம் போன்றவற்றில் சற்று தெளிவு வந்துள்ளது. ஞான மார்க்கத்தை தான் கற்க மனம் விழைகிறது.பக்தி சடங்குகளில் மனம் ஈடுபட மறுக்கிறது


ஆனால் தொடர் சளி மற்றும் வயிற்று பிரச்சனைகள் மற்றும் வேலை சம்பாதித்தல் போன்றவற்றில் ஏற்பட்ட தோல்விகள்  ஜோதிடம் பக்கம் இழுத்துக்கொண்டு வந்து விட்டது அதனால் பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிடும் என்று நம்பவில்லை ஆனால் அதில் சில உண்மைகள் இருக்கின்றன என்பதும் அதை சரியாக கையாண்டால் கடந்த காலம் மற்றும் வரும் காலத்தை தெளிவாக சொல்ல முடியும் என்பதிலும் நம்பிக்கை இருக்கிறது ஆனால் பரிகாரம் செய்து விதியை மாற்ற முடியும் என தோன்றவில்லை.நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது


  நமக்கு நம் மரபு கல்வியின் அடிப்படை தெரியாதது நம்மை எவ்வளவு அறிவிலியாக வைத்திருகிறது என்று புரிகிறது.வேலை கிடைக்க , கல்யாணம் நடக்க, வியாதி தீர, குடும்ப பிரச்சனை தீர,நிறைய செல்வம் சேர்க்க இவற்றிற்காக தான் நாம் கோவில்களுக்கு செல்கிறோம்.கோவிலுக்கு சென்றால் இவை எல்லாம் நடக்காது என்றால் நாம் கோவில் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டோம். இதை போல்தான் இப்பொது கல்வி. +12 மேல் படித்தால் வேலை கிடைக்காது என்று சொன்னால் ஒருவரும் டிகிரி படிக்க மாட்டார்கள்.


 நீங்கள் இவற்றை பற்றியெல்லாம் சலிக்காமல் உங்கள் தளத்தில் எழுதுகிறீர்கள்.சிலவற்றை திரும்ப திரும்ப என்னைப்போல் சிலராவது அவற்றை படித்து தெளிந்தால் கூட உங்களுக்கு அதனால் பெருமையே.ஒரு தலைமுறைக்கு நல்ல சிந்தனைகளை போதித்த ஆசானாக வருங்காலம் உங்களை மதிப்பிடும்.


நன்றி

கோபிநாத்