அது கொன்றவனுக்கும் புகழும் புண்ணியமும் சேர்ப்பதே. இதைப்போல 'நீறும்' நரகுக்கு ஒருவரை அனுப்புவதென்றால்…
மண்ணில் அவன் இரவும்பகலும் அதை எண்ணி எண்ணி 'நீறி'எரியப்போகிறான். அக்கண்ணீர் உலராமல்தான் விண்ணகம் ஏகுவான்…” என்றான்.
இங்கே வரும் 'நீறும்' 'நீறி' இவற்றின் பயன்பாடு புரியவில்லை ஜெ.
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஸ்ரீனிவாசன்
முன்னரே ஒருமுறை பதில் சொன்ன நினைவு
புகைந்து எரிதல் என்பதே நீறுதல். நீற்றி எடுக்கப்படுவதனால் அது நீறு.
உமியை கனல் போடுவதையே நீறுதல் என்பார்கள். சாணியை நீறு போடுவது திருநீறு.சுண்ணாம்புக்காளவாயில் நீற்றுவதும் உண்டு. ஆகவே சுண்ணாம்பையும் நீறு என்பார்கள்
http://agarathi.com/word/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஜெ