அன்புள்ள ஜெ,
பிரயாகை இதுவரை வந்த நாவல்களிலேயே அதிவேகமாகச் செல்கிறது. முதல் அத்தியாயத்தில் துருவனின் கதை தொடங்கியபோதே வேகம் ஆரம்பமாகிவிட்டது. மகாபாரதத்தை இப்படி துப்பறியும் நாவல்போல தினமும் விழித்திருந்து படிப்பேன் என்று நினைக்கவே இல்லை
அற்புதமான கதையோட்டம். துருபதனின் கதாபாத்திரத்தையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு அத்தியாயத்துக்குள் எத்தனை வண்ணமாற்றங்கள். அப்படியே மாறிக்கொண்டே இருக்கிறார். அவருடைய மனசுக்குள் என்ன நிகழ்கிறது என்று யோசிக்கவே முடியவில்லை
ஒருவன் செத்து சுண்ணாம்பாக ஆனபின்னாடி மெல்லமெல்ல மீண்டுவருவதை இந்தக்கதையில் காணமுடிகிறது. அவர் எப்படி ஆவார் என்றே ஊகிக்கமுடியவில்லை.
அவமானம் இப்படி ஒருவனை ஆக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. ஒருவன் அகங்காரத்தால் நிறைந்தவனாக இருந்தால் அவமானம் அவனை கிறுக்கனாகவே ஆக்கிவிடும். அதுவும் சாவும் ஒன்றுதான்
என்ன ஒரு கதாபாத்திரவிவரிப்ப்பு,. நினைக்க்நினைக்க தீரவே இல்லை
அருண் கண்ணன்