Tuesday, December 9, 2014

அன்னையர் இருவர்



ஜெ,

பிரயாகையில் எனக்கு மிகப்பிடித்த இடமே இந்த கத்ரு- வினதை கதையை குந்தி சொல்லுவதுதான். அற்புதமான வர்ணனைகல். உச்சைசிரவஸ் என்ற குதிரையைக் குந்தி வர்ணிக்கும் இடம் கிளாஸ். குழந்தைகளிடம் சொன்னால் அப்படியே வாய் திறந்து உட்கார்ந்துவிடும். உச்சைசிரவஸ் வரும்போது கடல் பொன்னிறமாக ஆவதும் அற்புதம்

குந்திக்கு வினதையும் காந்தாரிக்கு கத்ருவும் அற்புதமாக  பொருந்துகிறார்கள். அதேபோல அருணன் கர்ணனேதான். எப்படி இதெல்லாம் இப்படிச் சரியாக பொருந்தி வருகிறது உங்கள் கற்பனையிலே என்றுதான் ஆச்சரியமாக இருக்கிறது. நெடுங்காலமாக இதையெல்லாம் வாசித்துக்கொண்டே இருந்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது

அருணனின் வர்ணனையையும் வாசித்துக்கொண்டே இருந்தேன். நீலம் ஒரு அனுபவம். அதிலே இருந்து நான் இன்னும்கூட வெலியே வரவில்லை. இப்போதுதான் அந்த பரவசம் கிடைத்தது

ஆசீர்வாதம்

சுவாமி