ஜெ
சின்னவயசில் கேரளத்தில் திரிச்சூர் அருகே ஒரு ஊரிலே சென்றபோது அங்கே ஒரு இடுங்கலான மலைக்குகை உண்டு என்று சொன்னார்கள். அது புனர்ஜனி என்று சொன்ன பெயர் நன்றாக நினைவிருக்கிறது. அதன் வழியாக நுழைந்து மறுபக்கம் வந்தால் மறுபிறவி என்றும் பாவங்கள் தொலையும் என்றும் சொன்னார்கள்
இரண்டு கிலோமீட்டர் இருக்கும். வெளியே வரும் இடம் சரியான இடுங்கல். நாங்கள் சின்னப்பிள்ளைகள் ஈஸியாக வந்துவுட்டோம். பாட்டிதான் வெளியே வரமுடியாமல் பயந்துபோய் அலறி அழுதார்கள். கடைசியில் ஒருவழியாக வந்துவிட்டாள். ஆனால் அவள் அதன்பிறகு நன்றாக தேறி மகிழ்ச்சி ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு பல நோய்கள் இருந்தன. அதுபற்றிய எல்லாம் விலகி விட்டது.
அதேமாதிரியான அனுபவம் பாண்டவர்கள் அந்தக் குகைப்பாதை வழியாக வந்தது. நுட்பமாக சொல்லியிருந்தீர்கள். அந்த மனநிலை மாற்றம் எல்லாம்
சிவா
அன்புள்ள சிவா
நீங்கள் சென்றது திருவில்வமலை புனர்ஜனியாக இருக்கலாம்
அதேபோன்ற குகைவழிப்பாதைகள் தமிழகத்திலும் சிலகோயில்களில் உள்ளன. காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் உள்ள நினைவு வருகிறது
ஜெ