Sunday, January 4, 2015

வெண்முரசு நாவல்கள்




அன்புள்ள ஜெ,

வெண்முரசு ஒருவருடமாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். பெரிதாக ஏதும் எழுதவில்லை. காரணம் நான் எழுத ஒன்றுமே இல்லை. இதிலே வரும் கடிதங்களைத்தான் வாசிக்கிறேன். கடிதங்களிலேயே எல்லா விஷயங்களும் பேசப்படுகின்றன. நான் விட்டுவிட்ட எதாவது இருந்தால் கடிதங்களில் வாசிக்கமுடிகிறது. அதுதான் எனக்கு ஆர்வமாக இருக்கிறது

வெண்முரசு நாவ்ல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கின்றன. இப்போது வாசித்தால் முதற்கனல் ரொம்ப பின்னாடி ஏதோ மாதிரி இருக்கிறது. பிரயாகை மிக நெருக்கமாக இருக்கிறது. மழைப்பாடலுக்கு ஒரு அமைப்பு இருந்தது. வண்ணகடல் தத்துவம். நீலம் கவிதை. பிரயாகை விறுவிறுப்பான கதை

வண்ணக்கடல்தான் எனக்கு ரொம்பப்பிடித்திருந்தது. அதில் அத்தனைபேரும் பாதிக்கப்பட்டவ்ர்கள். புறக்கணிப்புக்கு ஆளானவர்கள் என்பதுதான் கராணம்

காமாட்சிநாதன்