Wednesday, January 7, 2015

ஆண்பெண்



ஜெ சார்

பாஞ்சாலியின் கதாபாத்திரத்தை வாசிக்கையில் அவள் ஒரு ஆண் தன்மை கலந்த பெண் என்றுதான் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவளுடைய நிமிர்வு மட்டும் அதுக்கு காரணம் இல்லை. அதற்குமேல் ஒன்று இருக்கிறது. நீங்கள் ஷாத்ரம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா அந்த குணம் நிறைந்தவளாக அவள் இருக்கிறாள். வென்றெடுப்பதைப்பற்றி நினைக்கிறாள். உலகை தனக்குச் சாதகமாக வளைக்க நினைக்கிறாள்

அப்படிப்பட்ட பெண் தருமன் முன்னாடிதான் கொஞ்சம் நிலைகுலைந்தாள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதை நினைத்துப்பார்க்கவேண்டும் என்ரும் தோன்றியது. ஒவ்வொரு ஆனுக்கும் அவளுக்குமான மானசீகமான உறவைப்பற்றி நிறையவே யோசிக்கலாம். வென்முரசில் பிரயாகை ஒரு தனி இடம். இது உளவியல் நுட்பங்களின் நவால். அதில் இந்தப்பகுதி முகவும் நுட்பமானது

சாமிநாதன்