இனிய ஜெயம்,
இன்றைய இயற்க்கை, நகரம், சுயம்வர மண்டபம் என அத்தனை வர்ணனையும் அந்த இடங்களில் திரிந்தது போல அத்தனை துல்லியம்.
குறிப்பாக
அந்தன சேரி துவங்கி சுயம்வர மண்டபம் வரை பாண்டவர் பயணத்தில் கொஞ்சம்
கொஞ்சமாக கூட்டம் அதிகரித்தபடியே செல்லும் சித்திரம் கற்பனைக்கு மிக
அணுக்கமாக எழுதப்பட்ட ஒன்று.
சுண்டுவை கிண்டல்
செய்வது துவங்கி, ஜராசந்தன் உன்னைத்தான் தேடுகிறான் என்று தர்மன்
கூறுகையில் புன்னகைப்பது வரை பீமன் அத்தனை நிதானம்.
அன்னை
விழி என்ற அருவி முடிந்து அந்த நீரோட்டம் வெள்ளமாக நகர்வது போல ஒரு மொழி
நடை. ஹும் அடுத்த அத்யாத்திர்க்கு அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டுமா?
அதுவரை மீண்டும் மழைப் பாடல்....
கடலூர் சீனு