Saturday, January 17, 2015

கரியோனும் கரியோளும்



ஜெ

ஆரம்பத்திலேயே எனக்கொரு பயம் இருந்தது, இப்படி எல்லா கதாபாத்திரங்களையும் ஒருமாதிரி உச்சத்திலேயே கொண்டு வந்து நிறுத்துகிறீர்களே, கடைசியில் கிருஷ்ணனும் பாஞ்சாலியும் சப்பையாக டைப் ஆக மாறிவிடுவார்களோ என்று நினைத்தேன். ஆனால் உங்கள் அம்புறாத்தூளி தீருவதே இல்லை. இப்போது இவர்கள் இரண்டுபேரும்தான் பிரம்மாஸ்திரங்கள்.

இருவரையுமே இரண்டு enigma க்களாகத்தான் காட்டுகிறீர்கள். இரண்டுபேருமே ஒன்றுதான். அழிவின் ஆக்கங்கள். ஆக்கத்தின் அழிவுகள். கிருஷ்ணன் கிருஷ்ணை. இரண்டுபேருக்கும் இடையே என்ன உறவு என்பதும் பெரிய மர்மம். அதைப்புரிந்துகொள்வதுதான் உண்மையிலேயே மகாபாரதத்தை புரிந்துகொள்வது

இதில் வாசகர்கள் செய்யவேண்டியது இவர்களை கூர்ந்து கவனிப்பதும் இவர்களை விவாதிப்பதும்தான். ஆனால் தொடர்ச்சியாக ஆசிரியரிடமே ஏன் அப்படி எழுதினீங்க என்று கேட்பதும் விக்கிப்பீடியால அப்டி இல்லியே என்று கேட்பதும் தான் நடக்கிரதோ என்று சந்தேகமாக இருக்கிறது

கிருஷ்ணன் கிருஷ்ணையை ஒரு கிளி வேறுபாட்டில் விட்டுவிட்டுச் செல்கிறான். அது கேசினி. அவளுடைய கேசம். அதுதான் கடைசியில் பாரதப்போரின் ரத்தத்தை குளிக்கப்போகிரது அதை எப்படியோ முன்னால் உணர்ந்துதான் அர்ஜுனன் பயப்படுகிறானா?

சாரதி