Monday, January 12, 2015

அணிகள்

 
 
 
இன்னும் எத்தனை விழா பற்றி எழுதினாலும் உங்களின் மொழி அகராதி வற்றாது போல. அம்பையின் சுயம்வரம், பாண்டுவின் அரசு ஏற்பு, இந்திர விழா என்று பலது இருந்தாலும், இந்த திரௌபதி திருமணம் சுற்றி வருவது பெரிய பிரமிப்பு. சொல்ல போனால் கி.மு கி.பி போல இந்த திருமணத்திற்கு  முன் - பின் என்று காலம் இந்திய வரலாற்றை மாற்றும் என்று படுகிறது. 

தகவல்கள் கொட்டி தள்ளி செல்கிறீர்கள். 82'ல் மீண்டும் நாடுகளின் அரசர்கள் வருகை என்றும், 83ல் திரௌபதி அணியும் நகைகளின் பட்டியல் என அள்ளி வீசும் புது வார்த்தைகள், பொருட்களின் புது பெயர்கள் என தளர வைத்தது.  நீராட்டறை வர்ணனை நெஞ்சு விம்ம வைத்தது. கல் விரல் தொடங்கி கை விரல் முடியும் வரை சென்ற வரிசை மிக அழகு.இந்த 6,7 பகுதகளில் வார்த்தைகளின் வண்ண ஜாலங்களில் மிளிர்ந்து மிதந்தாள்... 

பயமாக இருந்தது அந்த கூடத்தில் இருக்கும் அரசர்களின் ஆசைகள் பற்றி நினைக்கும் போது.மிக சிலர் தவிர அத்தனை பேரும் பங்கு கொள்ள மட்டும் தான் வந்து இருப்பர். ஆனால் இந்த நாளின் முக்கியத்துவம் இனி வரும் நாட்களை மாற்றி அமைக்கும். அர்ஜுனனின் மனம் பற்றி யோசித்தேன். அவளை அடைதலை விட அவனுக்கு அந்த வில்லை வெல்லுதலே முக்கியமாகி இருக்கும். இதை விட அவனுக்கு வேறு மேடை கிடைக்குமா தான் ஒரு மகா வீரனாகி வருவதை பறை சாற்றவும், மற்றவர்களுக்கு பயம் செலுத்தவும். துருபதனின் இருபது வருட காத்திருப்புக்கு விடை கிடைக்க போகிறது. 

தினம் ஒரு லட்டு என்று இருந்தாலும் இது போன்ற இடங்களில் சடக்என ஒரு 2,3 பகுதிகளை தான் கொடுத்தால் என்ன வந்து தொலைக்க போகிறது. புது வருட நொடிகளை போல இரவு கோட்டான் என 12 மணிக்கு பதற படித்து அலர்ந்து தூங்க சென்று .... கடவுளே !!

அன்புடன், லிங்கராஜ்