Saturday, February 7, 2015

நியாயவான்கள்




ஜெ

தருமன் இன்று [வெண்முகில்நகரம் 6] சொல்லும் வரிகள் முக்கியமானவை. அதாவது எதிர்தரப்பில் நியாயம்பேசுபவன் நியாயமாக நடந்துகொள்பவனைத்தான் நாம் மிகவும் சந்தேகப்படுகிறோம். அவனைத்தான் துரோகி என்று சொல்கிறோம். ஏனென்றால் அவனை ஒழித்துக்கட்டாமல் நம்மால் வெறுப்பைக்கொண்டு செல்லமுடியாது. புலிகள் போரிட்டபோது முழுக்கமுழுக்க அந்தப்பக்கம் உள்ள நியாயவான்களைத்தான் முதலிலே தேடித்தேடிக்கொன்றார்கள். ராஜினி திரணகம கொல்லப்பட்டபோது நான் இதை நினைத்துக்கொண்டேன். அதையே கூர்மையாக வாசித்தபோது ஆச்சரியமாக  இருந்தது

அதேபோல நம்முடைய பக்கத்தில் உள்ள நல்லவர்களை நியாயம் பேசுபவர்களைக் கொல்வதும் போரிலே முக்கியமானது. அதன்பிறகு இரண்டுபக்கமும் நியாயங்களுக்கு இடமில்லை. அநியாயங்களுக்குத்தான் இடம். மாறி மாறி என்னவேண்டுமென்றாலும் செய்யலாம். ஏதாவது கேட்டால்  அதை அவன் செய்யவில்லையா என்று பதில் சொல்லலாம். இங்கே எப்போதும்  நடக்கும் அரசியல் முக்கியமானது இதுதானே? கொள்கை என்று ஒன்றும் இல்லை. நாம் தேவர்கள் மற்றவர்கள் அசுரர்கள்

கனகன்