Thursday, February 19, 2015

முதல் காமம்




அன்புள்ள ஜெ

பீமனுக்கும் பாஞ்சாலிக்கும் இடையே உள்ல உறவைப்பற்றிய அத்தியாயங்களை இப்போதுதான் வாசித்தேன். இமாலயத்தை ஒரு கொடிமரமாகவும் அதிலே பறக்கும் கொடியாக கங்கையையும் சொல்லியிருந்த இடம் கிளாஸ். பலமுறை சிந்த்த்தாலும் அந்தப் பிரம்மாண்டத்தை கண்ணுக்குள் கொண்டுவரவே முடியவில்லை. மனசுக்கு எட்டாத பிரம்மாண்டம். மெடபிசிக்கலான விஷயங்களில்தான் அந்த பிரம்மாண்டமே சாத்தியமாகிறது என நினைக்கிறேன்

அதேபோல உடல் என்பது தொடுவதற்குரியது இல்லை உரசிச்செல்வதற்குரியது என்று சொல்லும் இடமும் கிளாஸ். அதை ஒரு பொயட்ட்க் அட்டரன்ஸ் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. அதுவும் காமத்தைப்பற்றிய ஒரு அல்டிமேட் ஸ்டேட்மெண்ட் அது

மன்னிக்கவும் எனக்கு விரிவாக எழுதத்தெரியவில்லை. ஆனால் அந்த அத்தியாயம்போல காமம் திளைக்க எழுதப்பட்ட ஒரு பகுதி வெண்முரசிலே வேறு இல்லை. அப்படி ஒரு உச்சம். அவர்கள் இரண்டுபேரும் ஆதி ஆணும் பெண்ணும்போல ‘ஏதேன்’ தோட்டத்திலே போய் கூடுவது ஒரு அபாரமான கற்பனை

ஜெயராஜ்