ஜெ
பித்தனின் பத்து நாட்கள் வாசித்தபோது நீங்கள் எழுதப்போவது என்ன , அந்த உச்சம் என்ன என்று புரியவில்லை. ஆனால் புரிந்துகொண்டும் இருந்தது. இப்போது இந்த 19 ஆவது அத்தியாயத்தை வாசித்தபோது புரிந்தது. எப்படிப்பட்ட மனநிலையில் இருந்திருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன். ஹனிமூன் மனநிலையில் தொடங்கி அப்படியே மேலே மேலே சென்று அந்த தேவியின் பாதங்களைத் தொட்டு விட்டீர்கள். இத்தனை ரத்தமும் கண்ணீரும் இல்லாமல் அதை தொடமுடியாது
அந்த அத்தியாயத்தை அறியக்கூடியவன் அந்த சாக்தன். அராம்பம் முதலே அவன் வந்துவிட்டான். அவனில் இருந்தே தொடங்கி அவனில் முடிகிறது. இந்த அத்தியாயங்கள் மட்டுமே ஒரு தனி நாவல் என்று சொல்லலாம். அவனுடய கண்டறிதலை அவளை தொட்ட ஐந்து கைகளும் உணரமுடியாது.
அல்லது பிற ஐந்துபேரும் ஐந்து தேவி வடிவங்களைப் பார்த்தார்கள். அவன் உக்ரசாமுண்டியைச் சந்தித்தான் இல்லையா? அவன் அடைந்ததை ஒரு நவீன நாவல் சொல்லிவிடது என நினைக்கவே சிலிர்ப்பாக இருக்கிறது
எஸ். ஆர்.மோகனரங்கன்