[அக்னிதேவன். தன் வாகனமாகிய ஆட்டின் மீது. பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்கவும்]
ஜெ,
இன்று வெண்முகில் நகரத்தில் இந்த வரிகளை வாசித்தேன். அழகான துதி என்று கடந்து சென்றபோது மூன்றாவது வரி என்னை அதிரவைத்தது. மொத்தமாக மீண்டும் வாசித்தேன். இந்த கவிதையின் முடிப்பு மூன்று வரிகளும் ஆக்ஸிமோரான் போன்றவை
‘
அழியாதவனே எங்கள் சமதைகளில் எழு.
அனைத்துமறிந்தவனே எங்கள் சொற்களுக்கு நடமிடு.
அடங்காப்பசி கொண்டவனே எங்கள் குலங்களைக் காத்தருள்.
அழியாதவன் எரிந்து அணைந்து தீரப்போகும் விறகுகளில் வருகிறான். அனைத்தும் அறிந்தவன் மனிதர்கள் சொல்லும் வேதச்சொற்களுக்கு நடனமிடுகிறான். அடங்காப்பசி கொண்டு அனைத்தையும் அழிப்பவன் குலங்களை காக்கிறான்
சிதை நெருப்பிடமே குலம்காக்க வேண்டுவதற்கு ஒரு பெரிய விவேகம் தேவை ஜெ
சாரங்கன்