வெண்முரசில் நேற்று, சகதேவன் வந்துவிட்டான். அர்ஜுனனோடு அவன் உரையாடல் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குந்தி மற்றும் பீமனின் சந்திப்பை பற்றி கூறி அர்ஜுனனை சிரிக்க வைத்து அவனை எளிதாகுகிறான். குந்தியின் அகநிலையை துல்லியமாக கணிக்கிறான். பீமனின் கபடமற்ற நடத்தையை ரசித்து விவரிக்கிறான். அர்ஜுனனை சாந்தப் படுத்துகிறான். அன்னையின் ஆணையை ஏற்கலாம், ஆனால் அது நிறைவேற போவதில்லை என்று நிமித்தம் கூறி, அர்ஜுனனை நிம்மதியுற செய்கிறான்.அர்ஜுனனின் சினத்திற்க்கான காரணத்தை அவனிடம் நேராக கூற முடியாது, ஆனால் சூதர்களிடம் கூறுகிறேன் என்றுறைக்கிறான்.
மொத்தத்தில் சகாதேவன் இனிமையானவானகவும், அறிவாற்றல், சொல்லாற்றல் மிக்கவனாகவும் மலர்ந்து விட்டான். வரப்போகும் நாட்களில் அவன் பாத்திரப் படைப்பு மேலும் தெளிவாகும் என்பதில் ஐயமில்லை.
ராதிகா பார்த்தசாரதி