அன்புள்ள ஜெயமோகன்
பாணன் விறலி இருவரும் நரத்தின் அடித்தளத்தை தங்கள் சொல்லடுக்குகளால் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். உங்கள் எழுத்தில் சொறிகள் நடனமிடத்தொடங்கிவிட்டன. மூன்றாவது அத்தியாயத்தில் குருளை என்று வாசித்தபோது அது என்ன என்று சிந்தித்தேன். ஆனால் தொட்ர்ந்து பாணனே அதைக் கற்பித்துவிட்டான். இளம்கன்று என்று. அதேபோல அகடியம் என்பதைப்பற்றியும் அந்த வரிகளே சொல்லிவிட்டன
பாண்டவர்களுக்கு நடுவே நிகழும் உணர்ச்சிகரமான நாடகமும் விறலியுடன் அவர்கள் பேசும் பேச்சும் உணர்ச்சிகளும் வழக்கம்போல அமைதியாக அருகே அமர்ந்து அவர்களைக் கேட்பதுபோலவே தோன்றியது
சோபனா அய்யங்கார்
அன்புள்ள சோபனா,
குருளை என்றால் cub என்பதற்கான சரியான தமிழ்ச்சொல்
அகடியம் என்றால் செய்யப்படாத ஆனால் நினைக்கப்படுகிற அநீதி
ஜெ
அன்புள்ள ஜெ
விறலி பாடும் காட்சியில் பாண்டவர்கள் ஒவ்வொருவருடைய மனமும் அவர்களின் உடலில் வெளிப்படுவது அற்புதமாக இருந்தது. சினிமாபோல. சினிமாவின் மிகச்சிறந்த பாஸிபிலிட்டி என்பதே இப்படி உணர்ச்சிகளை கண்ணால் பார்க்கும்படியாகக் காட்டமுடியும் என்பதுதான். அதை மொழியிலே வாசிக்கும்போது இன்னமும்கூட நுட்பமாக காணமுடிந்தது
சாந்தி எஸ்