அன்புள்ள ஜெ சார்
பூரிசிரவஸின் குணச்சித்திரம் மெதுவாகத் துலங்கி இன்று தெளிவாகத் தெரிகிறது. அலைபாய்ந்துகொண்டே இருக்கிறான். அவனுக்கு என்னதேவை என்றே தெரியவில்லை. அவனுக்கு இளவரசுப்பட்டம்தான். அரசாங்கம் இல்லை. அரசு கிடைக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் அதைப்பற்றிய பெரிய ஏக்கமும் அவனுக்கு இல்லை. அவனால் ஒரு படையைத்திரட்டமுடியும் என்றே தெரியவில்லை. கால ஓட்டத்தில் சும்மா ஒழுகிக்கொண்டேன் இருக்கிறான். ஒரு அழகான உற்சாகமான மேலோட்டமான ‘யூத்’ என்று சொல்லலாம்
இப்படிப்பட்ட இளைஞர்களை நாம் அடிக்கடி இன்றைக்குச் சந்திக்கிறோம். ஆனால் மகாபாரதம் மகாபுருஷர்களின் கதை. அதற்குள் இப்படி ஒரு எளிமையான வீரனைச் சந்திக்கும்போது பெரிய ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அர்ஜுனனையும் பீமனையும் கர்ணனையும் இவனுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறது மனம்./ அவர்கள் மேல் பிரமிப்பு இருந்தாலும் இவன் மேல் தனீ பிரியம் வருகிறது அது ஏனென்றே தெரியவில்லை
அவன் பெண்ணிலிருந்து பெண்ணுக்குத்தாவிக்கொண்டிருக்கிறான் என்பதுகூட இயல்பானதாகவே இருக்கிறது. டீன் ஏஜ் பையன்களின் மனசு அதுதான். அவர்களுக்கு ‘போய்க்கொண்டே’ இருப்பதுதான் பிடித்திருக்கிறது
சிறந்த கதாபாத்திரம் பூரிசிரவஸ். அவனுடைய முடிவு எப்படி இருக்குமோ என்ற ஏக்கமும் வந்துகொண்டுதான் இருக்கிறது
பாஸ்கரன்