Tuesday, May 5, 2015

ஒருமலர்க் கதம்பம்

 

 

ஆசிரியருக்கு ,


வெண் முகில் நகரின் முக்கிய பண்பு என்பது: 

பூரிசிரவஸ் போல, சத்தியாகி போல  மகாபாரத்ததில் பிரதானமாக படைக்கப்படாத பாதிரங்களை அவர்களுக்கு ஒரு காவிய அலங்காரங்களைக் கொடுத்து அவர்களை பிரதான நோக்கில் காண்பது. 

திருதிராஷ்ற்றன் துரியனை அடிப்பது போல , குந்தியின்  ஹஸ்தினாபுரி  மறு நுழைவு  போல, கௌரவர்களும் பாண்டவர்களும் தழுவிக்கொள்ளுதல் போல , அவர்கள் ஒன்றாக தமது தந்தையைக் காண்பது போல இல்லாத அல்லது பேசப் படாத சம்பவங்களை ஒரு காவிய சம்பவங்களாக உயர்த்த்துவது. 

துரியன் காயமடைந்து படுத்திருக்கும் போது நிற்பவைமீது படிந்த தத்துவப் பார்வை ,  கிருஷ்ணன் காந்தாரி அறையில் குழலூதுவது , இன்று திரௌபதி அலங்கார நகரில் காலடி எடுத்துவைப்பது போல ஒரு  நிகழ்வல்லாத நிகழ்வை நுண் விவரணை மூலம், தரிசன இணைப்புகள் மூலம் , பெரும் கதை சொல்லல் மூலம் ஓங்கிச் சொல்வது.

மகா பாரதம் போல் அல்லாமல்  வெண் முரசில் அனைத்தும் நுண்ணியது , அனைத்தும் ஒரு பெரு  நிகழ்வு , அனைவரும் நாயகர்கள்,  அனைத்தும் சமமானது மையமானது. அனைத்து கதைகளும் பெருங்கதைகளே காவியங்களே.   

கிருஷ்ணன்.