ஜெ,
தீர்க்கசியாமர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நுணுக்கமானது. ஒரு காலகட்டத்தின் குணம் அந்த காலகட்டத்து மனிதர்களிலே ஓங்கி நிற்கும். திருதராஷ்டிரர் துவாபர யுகத்திலே வாழ்கிறவர். ஆனால் துரியோதனன் மானசீகமாகக் கலியுகத்திலே வாழ்கிறான். அவன் கலியவதாரம். அவர்கள் ஒரு யுகசந்தியிலே இருக்கிறார்கள். ஆகவேதான் அந்த முரண்பாடு
தன்னுடையக் காலகட்டத்தைச்சேர்ந்த எல்லா உயர்ந்த பண்புகளையும் துரியோதனன் பெற்றிருக்கிறான். ஆனால் அதனால் பயனில்லை. அவனுக்குள் உள்ள கலியுகப்பண்புதான் மேலே எழுந்துவரப்போகிறது. அதை அவனாலேயே தடுக்கமுடியாது. அவன் அதற்கு அடிபணிந்தே ஆகவேண்டும்
மிக நுட்பமாக கண்ணீல்லாத சூதர் மகாபாரதக்கதையின் சாராம் சத்தை சொல்லிவிட்டுச்சென்றுவிட்டார். வெண்முகில்நகரம் அந்த வரியுடன் உச்சத்தை அடைந்துவிட்டது
உணர்ச்சிகளை ஏற்றி ஏற்றிக்கொண்டுபோய் அந்த உச்சியிலே உடைத்துவிட்டு சென்றுவிட்டீர்கள். அந்த கோபுரம் ஏறிப்போய் வெட்டவெளியே நின்றோம். அந்த வெறுமை அற்புதமானதாக இருந்தது. மீளமுடியவில்லை
ராமச்சந்திரன்