Monday, June 15, 2015

திரௌபதியின் நகரும் பாமையின் நகரும்

ஆசிரியருக்கு ,

திரௌபிதியின் வெண் முகில்  நகர் அவளின் திட்டம் என்றால் பாமையின் துவாரகை இவளின் கனவு. முதலாவதில் திட்டம் கனவை அடைகிறது, இரண்டாவதில் கனவு திட்டமாக அமைகிறது. இருவருமே தத்தமது நகர்களை துளித்துளியாக அறிந்துள்ளனர். இரு நகர்களும் அவர்களின் அகமேதான். பெண்களின் கனவை நிறைவேற்றவே இங்கு ஆண்கள் செயல்படுகிறார்கள். 

இன்றைய பகுதியில் பயணத்திற்கு செய்யும் ஏற்பாடுகளும், தொலைவில் மிதக்கும் பாமையும் சிறப்பு. நீகள் அடிக்கடி கூறுவது போல பயணம் துவங்குவது என்பது நாம் தயாரிக்கத் துவங்குவது முதலே துவங்கி விடுகிறது , பயணத்தின் உவகையும் தயாரிப்பிலேயே அனுபவிக்கிறோம் நாம். இப்பயணம் இவர்களுக்கு வாழ்விலே ஒரு முறை. திரும்பிய பின் தான் கண் கண்டதை மனம் அறியும் . திருத்ட்டத்துயும்னன் குதிரையில் கண்ட துவாரகைக்கு ஒப்பானது இன்று இவர்கள் காண்பது. 

ஒருநகர் கட்டப்படும்  போது அதைக் காண்பது, ஒரு கனவு உருவாகும் போது காண்பதற்கு நிகர்.    

கிருஷ்ணன்