Monday, June 8, 2015

காண்டவம் இனி



அன்புள்ள ஜெ வணக்கம்.

வெண்முரசு நூல் ஏழு காண்டவம் மற்றதைவிட அதிக உணர்வு கொந்தளிப்புக்கொண்டதாகவும், சந்ததம் வந்த நிலையையும் தருகின்றது. சூதர்கள் பாடல்களின் உணர் எழுந்து வருகின்றது என்பதை விட, எழுத்தே அந்த நிலையிலேயே உள்ளது. இரும்பு குழம்பை உருக்கி ஊற்றுவதுபோல.


அரியயன் அறிந்திடா சிவந்தபாதம் அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு நடராஜன்
அழலுறும் இரும்பின்மேனி மகிழ்மரகதம் பெணாகம்
அயலணி சிவன்புராரி அருள்சேயே-என்னும் திருப்புகழ் வரிகளில் வரும் அழலுறு இரும்பின்மேனி மகிழ்மரகதம் என்னும் வரியின் பொருளாகி காட்சிக்கொடுத்து செல்லும் எழுத்துக்கள். 

 நன்றி 
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்