Thursday, August 20, 2015

சொற்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கும் பொருள் அனுப்புங்கள்

அன்புடன்
பிரசன்னா 
 
ஒறுப்பு -அடக்குதல், ஒடுக்குதல்
குருளை -புலி, சிங்கம் போன்றவற்றின் குட்டி
அச்சிரம் - முன்பனிக்காலம்
அதலவிதலம் -ஏழுஅடியுலகங்களில் முதல் இரண்டு [அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்.
நீரரமகளிர் -மச்சகன்னி, மீன்பெண்
அகங்கால்கள் -கால்களின் அடிவெள்ளை
அஃகி – குறுகுதல் .மெல்லமெல்ல இல்லாமலாதல்.
உழிந்து -மெல்லச் சுழற்றுவது, 
சிசிரம் – பருவங்களில் ஒன்று , பனிக்காலம் [வஸந்தம், க்ரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம்]
ஒள்வேல் - ஒளிகொண்ட வேல்
தாலமுழிந்து -தாலம் என்றால் தாம்பாளம். உழிதல் என்றால் சுழற்றுதல்
சொல்சிந்தா அமைப்பு – ஒலி வெளிவராத அமைப்புவெளி
சளையீச்சை  ஈச்சை மரத்தின் ஒரு வகை. குமரிப்பகுதியில் அதிகம் உண்டு

ஜெ