Friday, December 4, 2015

சிவையும் சுபகையும்





ஜெ

மீண்டும் நான். என்னை எழுதத்தூண்டியது சுபகை. அவளுடைய கண்ணீர் என்னை அந்தளவுக்கு அசைத்துவிட்டது. நன் முன்னும் உங்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பலகடிதங்களுக்குப் பதில் வராததனால் சோர்வு வந்து திரும்ப எழுதவில்லை. ஆனால் வெண்மு\ரசிலும் ங்கள் சொற்களிலும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்., உங்கள் குரலில் வெண்முரசை சொல்வதுபோலவே இருக்கிறது

திரும்பப்போய் சிவையை வாசித்துப்பார்த்தேன். சிவையும் சுபகையும் ஒரே கதாபாத்திரங்கள் அல்லவா? இருவருக்கும் ஒரே ராத்திரிதான். வியாசர் அவளை உதறிவிட்டுப்போனார். இவளை அர்ஜுனன் உதறவில்லை. சிவை தளர்ந்து அழிகிறாள். இவள் பொலிவுபெறுகிறாள். ஒரேநாள் வாழ்ந்தால்கூட பெண்ணுக்கு அது போதுமானதகா இருக்கிறது இல்லையா?

இந்தக்கதாபாத்திரங்களை மீண்டும் மனசுக்குள் ஓட்டிப்பார்க்கும்போது ஒரு வேதனையும் ஆனந்தமும் சேர்ந்தே வருகின்றன

எஸ்