அன்புள்ள ஆசிரியருக்கு,
காண்டீபம் அருமை. சுஜயனில்
தசவதாரம் கதை சொன்ன சிறுவன் தெரிந்தான். உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை என
முற்றிலும் மாறுபட்ட நாயகியரை காணமுடிந்தது.
வாளேந்தும் சுபத்திரையும், சித்ராங்கதையும் முற்றிலும் வேறுபட்ட நபர்களாகவே இருந்தனர்.
சபரிமலை போல ரைவத மலை மேல் யாதவர் ஏறக் கண்டு ஆச்சரியமாகவே இருந்தது.
கண்ணனையும், நேமிநாதரையும் கண்டது மகிழ்வளிக்க கூடியதாக இருந்தது.
ஐந்து முதலை கதைகள் பற்றி மேலோட்டமாக வாசித்திருந்தேன், உங்கள் பார்வை முற்றிலும் வேறாக விரிந்ததாக இருந்தது.
அடுத்து என்ன வரப்போகின்றது என் ஆர்வமாக இருக்கின்றேன்.
அன்புடன்
நிர்மல்