அள்ள அள்ளக் கலைந்தது நதி மணல்.
ஆயிரம் காலடிகள் பதிந்த மணல்.
அவற்றை அழித்தோடிய நதியே
காலமென்றறிந்த மணல்.
அன்றுகாலை எழுந்த
புத்தம்புதுமணல்.
ஜெ
நீங்கள் புனைவுக்குள் சென்று கதைசொல்லத் தொடங்கும்போது இத்தகைய வரிகள் கொஞ்சம் குறையும் என நினைக்கிறேன். ஆனால் தொடக்கத்தில் இவை உங்களுக்கு பெரிய ஆற்றலை அளிக்கின்றன. கவிதையிலிருந்து புனைவுக்குச் செல்கிறீர்கள்.
ரேணுகாதேவி அள்ளிய மணலைப்பற்றிய இந்த வரியை ஒரு புதுக்கவிதை வாசகன் மட்டும்தான் விரிவாக்கிக்கொள்ளமுடியும். அவளுடைய மனம். மொழி. இச்சை. இன்னும் என்னென்னமோ அந்த மணலாகி அங்கே விரிந்திருந்தன.
சண்முகம்