Saturday, January 2, 2016

சூரியன்



ஜெ

சூரியன் சாக்கடையிலும் விழமுடியும். அவனிலே எந்த அழுக்கும் படியாது. அதைப்போன்றவன் கர்ணன். கொடைக்கரம் கொண்டவன். அனைவரையும் கைநீட்டி அணைக்கிறான். சாக்கடை பூ என்றெல்லாம் பேதமே இல்லை.

ராதையை அவன் சமாதானம்படுத்தும் இடத்தில் அழுதுவிட்டேன். அவனுக்குத்தெரிந்துவிட்டது, அந்த உறவு முறிந்துவிட்டது என்று. ஒவ்வொரு வாசலாக மூடுகிறது. அப்பா அடுத்து அம்மா. அதன்பின் இரு மனைவியர். ஆகவேதான் தாழொலிக்கதவுகள் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்.

அந்த ஒவ்வொரு கதவும் மூடும்போது அவன் துக்கம் அடைந்தாலும் அதன் விளைவாக அவனை நிராகரிப்பவர்களுக்கு துன்பம் அளிக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறான். ராதை வருத்தப்படக்கூடாது என்பதற்காக அவளைச் சிரிக்கவைத்துவிட்டுப் போகிறான். அங்கேதான் அவன் சூரியனின் மகனாக நிற்கிறான்

சாமிநாதன்