Thursday, January 7, 2016

ஊழுக்கு உகந்தவர்கள்:



"உண்மை. களத்தில் அன்றி பிற இடங்களில் அனைத்தும் இறங்கிச் செல்வதே என் வழக்கம். எப்போதும் என் தரப்பு நியாயங்களைவிட அவர்களின் உணர்வுகளே எனக்கு முதன்மையாக தெரிகின்றன." - இவ்வரிகள் கர்ணனை சிறப்பாக வரையறுக்கிறது. உலக இயல்பை மீறும் எவரையும், எதையும் ஊழும், மனிதர்களும் மாறி மாறி காயப்படுத்துவார்கள். எப்போது தோற்பார்கள் எனக் காத்திருப்பார்கள். தோல்வி மட்டுமே சாத்தியமான ஒவ்வொரு சோதனையையும் இத்தகையோர் வெற்றிகரமாகத் தாண்டும் போதும் மேலும் மேலும் தர்மசங்கடமான, அநியாயமான, இறப்பனைய சோதனைகளைத் தந்து வேடிக்கை பார்க்கும் ஊழ். இறுதியில் இவர்கள் மடியும் போது தனது ஒட்டுமொத்த தவறுகளையும், சிறுமைகளையும் எண்ணி அவர்களைப் பாடாய் படுத்திய ஊழும், மானுடமும் கண்ணீர் உகுத்து, காலமெல்லாம் கடவுளாக்கி வழிபட்டுக் கொண்டேயிருக்கும். ராமன் துவங்கி கர்ணன் வழியாக காலமெல்லாம் இதையே நடத்திக் கொண்டிருக்கிறது ஊழ்...

அருணாச்சலம் மகராஜன்