வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Wednesday, January 20, 2016

களியாட்டு






பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்,
தங்களின் தளத்தில் புதிய நகைச்சுவை கட்டுரை எதுவும் சமீபத்தில்  வரவில்லையே என்ற எனது ஆதங்கத்தை போக்கிவிட்டது இன்றைய அத்தியாயம். வரிக்கு வரி படித்து விலா நோக சிரித்தேன்.!!!

“அங்கும் காகங்கள் இருக்கும்”


"நின்றிருந்த சேடி துணிகிழிபடும் ஒலியில் சிரித்தாள்"


“வேதமுணர்ந்தோர் முதலில் வெளியே செல்லலாம் என்றால் எந்த அந்தணரும் வெளியேறமாட்டார்”

"அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவுப்பழக்கம். ஒருத்தி ஒவ்வொருநாளும் தீயில் வாட்டிய பன்றிக்காது இன்றி உணவருந்துவதில்லை.”

"ஆனால் அதன்பின் கௌரவர்களைக் கண்டாலே நடுங்கத் தொடங்கிவிட்டது.” ஹரிதர் “ஏன்?” என்றார். “திடவர்மருக்கு அடுமனைப் பொறுப்பு. தென்னகத்து மிளகுத்தூள் இடிக்குமிடத்தில் இருந்து நேராகச் சென்றிருந்தார். யானையின் துதிக்கை அமைதி அடைய ஏழு நாட்களாயின.”

“முழு எருமைக்கன்றை உண்டு குளம்புகளை மட்டும் எஞ்சவிடும் உயிர்கள் உலகில் மொத்தம் நூறுதான் என்று ஒரு சொல் அஸ்தினபுரியில் உண்டு.”

"சிவதர் “எண்கள் போடலாமே” என்றார். சுஜாதன் “போடலாம் என்று நானும் சொன்னேன். ஆனால் தெய்வங்கள் அவர்களை விண்ணுலகுக்கு கூட்டிச்செல்ல பெயர்கள் தேவைப்படும் என்றார்கள்” என்றான். "
அன்புடன்,
அ .சேஷகிரி.
ஜெயமோகன் at Wednesday, January 20, 2016
Share
‹
›
Home
View web version

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile
Powered by Blogger.