ஜெ
போர்க்களக்காட்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. அவற்றில் பரபரப்பு மட்டுமில்லாமல் அபாரமான ஒரு காட்சித்தன்மை இருக்கிறது. கண்ணிலேயே நிற்கிறது. மகாபாரதக்கதைகளில் வழக்கமாக போர்க்களக்காட்சிகளை அம்பால் அடித்தான், தேரைமுறித்தான் என்று மட்டும்தான் சொல்ல்கொண்டிருப்பார்கள். நீங்கள் குழந்தைக்கதைகளை போல ஆக்கிவிடுகிறீர்கள். சட்டென்று வெண்முரசு ஒரு காமிக் போல ஆகிவிடுகிறது. ஒரு கிளாஸிக் அப்படி உருவம் மாறும் என்பதைப்புரிந்துகொள்ளமுடிகிறது
கர்ணனின் சமநிலையும் ஆழமும் அந்தப்போரில் வெளியாகின்றன என்றால் துரியோதனின் beastliness மட்டும்தான் தெரியவருகிறது. போர்க்களக்காட்சிகள் ஒன்றைப்போலவே அமையவில்லை. அர்ஜுனன் நடனமிடுகிறான். கர்ணன் அசையாமலிருக்கிறான் என்பது எவ்வளவு பெரிய வேறுபாடு
செல்வா