ஜெ
வெண்முரசின் ஒருமையை எண்ணி
வியக்காமலிருக்கமுடியவில்லை. ஒவ்வொரு துணைக்கதையும் மிகச்சரியாக மையக்கதைக்குள் வந்து
உட்கார்ந்துகொள்கின்றன. பாஞ்சாலியுடைய கதையுடன் தபதி கதையை இப்போதுதான் எண்ணிப்பார்த்தேன்.
பிரமிப்பாக இருந்தது
தீர்க்கதமஸின் கதை திருதராஷ்டிரரின்
கதையுடன் பின்னிப்பிணைந்து வருகிறது. அந்தக்கதை கர்ணனில் நீட்சி கொள்கிறது. அவன் கதையும்
அருணனின் கதையும் ஒன்றே. அவன்கதையும் பரசுராமரின் கதையும்கூட ஓரிடத்தில் இணைகின்றன.
அதை அவனுடைய நுட்பமான மனஓட்டம் கூட சொல்லிச்செல்கிறது
இத்தனை கதைகளைச் சேர்த்து
ஒற்றைக்கதையாக எப்படி அறிவது என்ற பிரமிப்பே மேலோங்குகிறது
செல்வா