அன்புள்ள ஜெ
வெண்முரசை தொடர்ந்து வாசிக்கிறேன்.
நீலம் வரை இப்போது வந்திருக்கிறேன். நீலம் ஒரு ஆட்டம். பித்துப்பிடிக்கவைக்கிறது. அதை
என்னால் வாசித்துமுடிக்கமுடியுமா என்றே தெரியவில்லை. லாஜிக்கலான இல்லாஜிக் என்று அதைச்
சொல்லமுடியும். ராதை கிருஷ்ணனை உருவாக்கி எடுப்பதைப்பார்க்கமுடிகிறது. ஆனால் அவளுடைய
பித்துநிலையும் தெரிகிறது. அவளுடைய துக்கத்தால் யமுனையே வற்றிப்போய் பாலையாக ஆகிறதென்பதெல்லாம்
அரிய கற்பனை
ஜெயச்சந்திரன்