ஜெ,
கௌரவர்களின்
மூத்தவனாக கர்ணனை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள், துரியோதனுக்கும்
மேலாகவே அவனை வைக்கிறார்கள், துச்சலை, காந்தாரி மற்றும் திருதரஷ்ட்ரர்
உட்பட. அவனோ ஒரு நொடியில் நான் உங்களில் ஒருவன் இல்லை ஏற்று சொல்லி
விடுகிறான், எல்லோரும் பீமனை அழைக்க ஓடும்பொழுது. எல்லோரும் இந்த்ரபிரச்தம்
போகும்பொழுது இவன் என்ன செய்வான் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சிவதர்
அவனுக்குள்ளே என ஓடுகிறது என்று அறிந்திருப்பார் போல, அதைதான் அந்த
அன்னத்தின் உவமையில் சொல்கிறார், மேலே இருப்பதை வைத்து உள்ளே இருப்பதை
அறிய முடியாது என்று. குந்தி உங்களை அழைத்தார் என்று பீமன் சொன்னதுமே
அவனும் இவர்களின் ஆட்டத்தில் கலந்து கொள்ள விழையும் பொழுது தெரிந்தது நான்
உங்களில் ஒருவன் அல்ல என்பதன் பொருள்,
(பாண்டவர்களில்) அவர்களில் ஒருவன் என்று. அவனே அறியாமல் அதைத்தான் சொன்னான் போல .
இது வரை நெஞ்சை நிமர்த்தி கண்களை மட்டும் உயர்த்தி என கம்பீரமாக வந்து கொண்டிருந்த கர்ணன் இப்பொழுது துண்டைக் கட்டிக் கொண்டு ஓடி சென்று தண்ணீருக்குள் பெரும் ஓசை எழுப்பி குதிக்கும் சிறுவன் போல ஆகி விட்டான்.
ஏ.வி. மணிகண்டன்