நச்சரவின் கண்களில் பொருளற்ற விழிப்பு.
யானையின் கண்களில் நான் பிறிதொன்று என்னும் அறைகூவல்.
புலியின் விழிகளில் விழியின்மை எனும் ஒளி.
பூனையின் விழிகளில் அறியாத ஒன்றுக்குள் நுழைவதற்கான நீள்வாயில்
இவையோ வௌவாலின் விழிகள். அணுக்கத்தில் பதைப்பவை.
இரவை அறிந்ததன் ஆணவம் கொண்டவை.
இரவில் தெரியும் வௌவாலின் கண்கள்
பகலையும் அறிந்த நகைப்பு நிறைந்தவை.
உரைநடையை நேரடியாக கவிதை நோக்கிக்கொண்டுசெல்லும் வரிகள். போகிறபோக்கில் வந்த இவ்வரிகளை நிறையமுறை வாசித்தேன் ஜெ
சண்முகம்