Tuesday, February 9, 2016

திரௌபதி






ஜெ

வெண்முரசை மிகத்தாமதமாக வாசிக்க ஆரம்பித்தேன். இப்போதுதான் வெண்முகில்நகரம் வரை வந்திருக்கிறேன். என்னால் புத்தகமாகத்தான் வாசிக்கமுடியும். படங்களுக்காக மட்டும்தான் இணையதளத்தை பார்த்தேன். பிரயாகையில் பாஞ்சாலி முதல் வெண்முகில்நகரம் பாதிவரை ஒருநாவலாக ஆக்கலாமென்று நினைத்தேன். அதற்கான அற்புதமான கட்டமைப்பு உள்ளது

பாஞ்சாலியின் பஞ்சசிகா அமைப்பும் அங்குள்ள தேவி வழிபாட்டுமுறையும் எல்லாம் எப்படிக் கடைசியில் ஒட்டுமொத்தமாக பாரதக்கதைக்கு உதவுகின்றன என்பதைப்பார்க்க வியப்பேற்பட்டது. அற்புதமான நுட்பங்கள். அவள் ஐந்து கணவர்களுடனும் கொண்ட உறவைப்போல நுட்பமான இடம், ஏதுமில்லை
சர்வகல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம் என்னும் வரியை நானும் கிறுக்கனைப்போலச் சொல்லிக்கொண்டே இருந்தேன்

சத்யமூர்த்தி