ஜெ,
பன்னிரு ராசிக்களம் முதலிலேயே வந்துவிட்டது.
கருநிற வருணன் மணியொளிவிடும் வானம். இது
முட்டத்தலையெடுக்கும் ஆடு என நீ. [மேஷம்]
உன் புன்னகை என சூரியன் எரியும்
வானம். இதில் நீ திமிலெழுந்த காளை. [ரிஷபம்]
குருதிமழை என சகஸ்ராம்சு எரியும்
வானம். அன்னை, அது நீ உன்னை புணரும் இணை. [மிதுனம்]
பொன்னிற தாதா.
விழிபடைக்கும் வானம். நாற்றிசையும் கால் நீண்டு திசையழிந்த பெருநண்டு நீ. [கடகம்]
தேவி, கலங்கி எழுந்து தபனன் மிளிரும் வானம். முகிலனலென சிம்மம் உறுமும்
வெளி. [சிம்மம்]
இன்மையெனத் தெளிந்து சவிதா புன்னகைக்கும் வானம். அது உன்
கன்னியெழில் [.கன்னி]
இருண்டவளே. செம்பழுப்பு நிற கபஸ்தியின் கதிர்விரிக்கும் வானம்.
அது நீ நடுமுள்ளென நின்றாடும் துலா. [துலாம்]
ஒளிக்கதிர் சவுக்குகள் ஏந்திய ரவி
அதிரும் வானம். தேவி, நீ நின்ற வானமோ ஒளிர்மஞ்சள். நீ சொடுக்கி வாலெழுந்த
சீறும் கருந்தேள். [விருச்சிகம்]
பச்சைநிறப் பேரொளி கொண்டவன் யார்? பர்ஜன்யன் என்கின்றனர்
அவனை. நீயோ அவன் முன் விரிந்த வில். [தனு]
பாலொளி பெருகிய திருஷ்டா உன் முடிமணி.
நீ ஆழமறிந்த அன்னைப்பெருமீன். [மகரம்]
புகைமூடிப்பொலியும் மித்ரனின் வானில் நீ ஓர்
அமுதகலம். [கும்பம்]
நீலப்பெருக்கென எழுந்த விஷ்ணுவின் ஒளிவிரிவில் நீ ஒரு மூடா
விழி.
அன்னையே, பன்னிரு களங்களில் நிறைந்தவளே. அமுதமாகி எழுக! [மீனம்]
இதில் நடக்கும் கதைகளை ஒன்றுடன் ஒன்று ராசிப்பொருத்தம் வழியாக இணைத்து வாசிக்கவேண்டும்- சரியா?
சத்யநாராயணன்