ஜெ
நான் பன்னிரு படைக்களத்தை ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து மீண்டும் ஆரம்பம் முதலே வாசித்தேன். ரம்பனும் கரம்பனும் பைத்தியநிலையில் உச்சரிக்கும் வார்த்தைகளின் பொருள் என்ன என்று முதலில் யோசிக்கவில்லை. இப்போது வாசித்தபோது திக் என்றது
அவர்களின் இருவரின் குணாதிசயமும் அந்தச்சொற்களில் உள்ளது. அதைவிட மனித பெர்சனாலிட்டி என்பது எப்படி உருவாகியிருக்கிறது என்பதே அதில் உள்ளது
ராம்