ஜெ
நான் தேவிபாகவதத்தை முழுமையாகவே பாராயணம் செய்திருக்கிறென் ரக்தபீஜனின் கதைக்கு இப்படி ஒரு விளக்கம் பிரமிக்கச்செய்கிறது. அதிலுள்ள மனோசாஸ்திர ஆழம் மட்டும் கிடையாது. அது ஆன்மீகமானதும்கூட. அதைத்தான் வியந்தும் நெகிழ்ந்தும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்
ரக்தபீஜன் ஏன் அந்தவரம் வாங்கினான்? அம்மா தன் மகனை முடிவில்லாமல் கொல்லமாட்டாள் என்பதனால்தான். அன்னையின் எல்லையை அறிந்தததால்தான். ஆச்சரியம்தான். அந்த இடத்தில் நெகிழ்ந்துவிட்டேன்
இம்மாதிரி நாவல்களை வாசிக்க வெறுமே கதையை வாசிக்கும் மனநிலை மட்டும்போதாது. புராணம் என்பது வேறு. அது ஒரு சிம்பாலிக் நெரேஷன். அந்த சிம்பல்களுடன் உள்ள உணர்ச்சிகரமான உறவு அவசியமானது
அதை இந்த நாவலை வாசிக்கையிலே உணர்ந்தேன்
ஜெயராமன்