ரக்தபீஜன் நகர்புகும்போது வரும் இந்த வர்ணனையை வாசித்து பித்தாகிப்போனேன். அர்த்தமில்லாத அர்த்தம் என்பதை போர்ஹெஸின் வரிகளில் இதற்கு முன் கண்டிருக்கிறேன்
தங்கள் பொருளின்மையின் பொருண்மையிலிருந்து விடுபட்டு பொருட்கள் தழலென எழுந்து படபடத்து நின்றாடின. உருவழிந்து மறைந்ததுமே அவை தாங்கள் இழந்த பொருட்களை மீண்டும் அடைந்தன.
பொருள் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு விளையாடியிருக்கிறீர்கள். ஆனால் பொருட்கள் பொருளழிந்து பைத்திய உலகுக்குள் செல்வதும் பைத்தியத்தில் இருந்து மீண்டும் வந்து பொருள்கொள்வதும் பொருண்மை அழிந்தபின் பொருள் அதாவது அர்த்தம் மட்டுமே எஞ்சுவதும் என்று பலவகையிலே சிந்திக்கவைத்த வரி
சாமிநாதன்