Wednesday, July 6, 2016

கடைசி வெறி






சூதாட்டக்களத்தை பலமுறை வாசித்தேன்.பயமும் அலைக்கழிப்பும் நிறைந்த அந்த மனநிலையை நம்மில் பலரும் வாழ்க்கையில் அறிந்திருப்பார்கள். நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் ஆணவமும் கலந்து ஒன்றில் இறங்குவது. விதியால் அடிவாங்கி தன்னம்பிக்கை தளர்ந்து படிப்படியாக அடிமைப்படுவது. சிலர் மட்டுமே மேலே வருவார்கல். மற்ற்வர்கள் மூழ்கிப்போவார்கள்.

 தருமனின் மனநிலையில் என்னைப்பார்த்தேன். அலையலையாக ரதகஜதுரபதாதிகள் வந்துவந்து தாக்கும் சித்திரம் மனம்பேதலிக்க வைப்பது கொஞ்சநாள் முழுக்க மொத்தச்சொத்தையும் இழந்து வீட்டில் இருக்கும் ஒரு தொழிலதிபரைக் கண்டேன். எக்ஸ்போர்ட் செய்கிறார். என்னைமாதிரி

நான் ’எப்படிசார் இப்படி கடைசிப்பைசா வரை வைத்து ஆடினீர்கள் என்று கேட்டேன். ஒரு கட்டத்திலே மைரு போனாபோகுதுன்னு ஒரு வெறி வந்திரும்சார். செத்திரணும்னு தோணுமே அதைமாதிரி. நெஞ்ச அறுத்து களத்திலே வச்சு ஆடுவோம்’ என்று சொன்னார். பயமாக இருந்தது. அந்த தற்கொலைத்தனமான வேகம் எங்கிருந்து வருகிறது? அதுதான் விதியா? 



சாரதா