Monday, July 4, 2016

இரட்டைத்தன்மை



 

 ஜெ,

 

 பன்னிரு படைக்களம் ஒரு மையக்கதையைக் கொண்டது. ரக்தபீஜாசுரன் தன்னை முடிவில்லாமல் பிறப்பிக்கிறான். அவனை எதிர்கொள்ள அன்னை தன்னை இரண்டாக ஆக்கிக்கொள்கிறாள். இந்த மைய மெட்டஃபர்தான் கடைசியிலும் வருகிறது. துரியன் தன்னை பெருக்கிக்கொண்டே சென்று ஒரு சபையாகவே ஆகிவிடுகிறான். திரௌபதி இரண்டாகப்பிரிகிறாள். ஒரு பகுதி கொலைவெறிகொள்கிறது. இன்னொன்று அன்னையாகிறது. ஆணின் அற்பத்தனத்தின் முன் பெண் கொள்ளும் இரட்டைத்தன்மை என்று இதைச்சொல்லலாம். நாவல்முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் இரட்டைத்தன்மை என்னும் அந்த மையச்சரடு பல்வேறு அர்த்தங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது

சாமிநாதன்