“ஆனால், தேர்தலில் வேல்ஸ் பகுதி பெரும்பான்மையாக வெளியேற வேண்டும் என வாக்களித்திருக்கிறது. அப்படி வாக்களித்ததை அறிந்து வேல்ஸ் மக்களே குழம்பிப்போயிருக்கிறார்கள். இது வெளிப்படையாகத் தெரியாத ஆழத்துக் கசப்புகள் மற்றும் சந்தேகங்களின் வெற்றி. ”
அன்பின் ஜெய்,
‘பிரெக்ஸிட்’ ன் தாக்கம் வெண்முரசிலும் வெளிப்படும் என்று அவதானிக்கிறேன். இறுதிப்போரில் யாதவர்களின் பங்களிப்பும் இத்தகையதே அல்லவா.
சசிகுமார்
அன்புள்ள சசிகுமார்
ஓரளவில் உண்மை. வரலாற்றுத்தருணங்களில் சாமானியர் கொள்ளும் கொந்தளிப்பும், தங்கள் அன்றாட்ச்சிறுமையைக்கொண்டு அவர்கள் வரலாற்றை முடிவுசெய்யும் அபத்தமும் எப்போதும் வெண்முரசில் வந்தபடியே உள்ளன
ஜெ