“அந்தணனின் நாக்கு கல்லுக்குள் நெருப்பென உறையவேண்டும், கல்மட்டுமே அதை எழுப்பவேண்டும்”
கடுமையான மொழியில் பேசிய ஒரு பிராமணனிடம் அவர் ஆசாரியார் சொன்னதாக ஒரு உபதேசத்தை அடிக்கடி என் தந்தையார் சொல்வார்கள். தனக்குச் சமானமான அறிவும் பின்புலமும் உடைய இன்னொரு அறிஞனிடம் வித்வத் சபைய்ல் மட்டுமே அவனுடைய வேகம் வெளிப்படவேண்டும். மற்ற எல்லா இடங்களிலும் மென்மையும் அடக்கமும்தான் அவன் வார்த்தைகளில் இருக்கவேண்டும்
வெண்முரசில் மேலே சொன்ன அழகிய வரி என்னை சிலிர்க்கவைத்துவிட்டது. நெரடியான ஒரு கவிதை. மிகச்சிறப்பாகச் சொல்லப்பட்ட ஒரு சுபாஷிதம். ஆனால் போகிற போக்கில் வந்துவிடுகிறது. அதைச் சுட்டிக்காட்டவேண்டுமென நினைத்தேன்
வேணுகோபாலன்