ஜெ
வெண்முரசு அளிக்கும் உத்தாலகர் ஸ்வேதகேது கதையில் முக்க்மியமானது இரு தரிசனங்கள். இரண்டுமே சாந்தோக்கியத்திலே உள்ளவை. ஒரு தரிசனம் அனைத்துமே விசும்புதான் என்கிறது. விரிந்து விரிந்துபரவும்படிச் சொல்கிறது. இன்னொரு தரிசனம் நீ என்கிறது. சுருங்கிச் சுருங்கி உள்ளே செல்லும்படிச் சொல்கிறது
ஆச்சரியமாக ஒரே தரிசனத்தின் இரண்டு முகங்களாக அவற்றை அமைக்கவேண்டும் என ஆரம்பம் முதலே திட்டமிட்டு கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள். அப்பா மகன் இருவருடைய ஆளுமைகளும் அதற்காகவே உள்ளன
அப்பா சொல் என்று சொல்பவர். ஆகவே அவர் குவியும்படிச் சொல்கிறார். மகன் பொருள் என்று நிற்பவன். ஆகவே அவனிடம் விரியும்படி அரசர் சொல்கிறார். பலகோணங்களில் இந்த இரண்டு அத்தியாயங்களையும் வாசித்து பொருள்நிறைவுகொன்ள்ளவேண்டியிருக்கிறது
சுவாமி